Monday 11 June 2018

Ishti

Ishti
G. Prabha, who was the Head of the Department, Oriental Languages at Loyola College, Chennai, had earlier made two films, Agnaye, a documentary film on Athirathram yagna, and Akkitham, on the life of poet Akkitham Achuthan NamboothiriThe film focuses on a very conservative Namboodiri family in a very regressive social milieu. இஷ்டி Ishti centres around two main characters, a 70-year-old Ramavikraman Namboodiri, who is a Vedic scholar who preserves the fire from a Somayagam to light his funeral pyre, and Sreedevi, his young, third wife. Sreedevi stands up against orthodoxy. She manages to inspire her husband’s son from another marriage to read and write. The conflict between these characters and those who revolve around their lives is what the film is generally about. It then also becomes a strong comment on the attempt to balance worldly desires and the rigidity of caste and tradition.Ramavikraman Namboodiri (Nedumudi Venu) is a 71 year old Vedic scholar and a Somayaji, one who was the “Yajamanan” at a Somayagna. His ambition is to perform the Athirathram, a yagna that will make him an Akkithiri which is a yagna of which the flame has to be preserved till the patriarch dies and the fire is used to light his own funeral pyre. The sons and brother of Ramavikraman are trained to chant the mantras for the yagna which is a continuous process as detailed in the film but they are not allowed to learn to read and write. So, they remain illiterate and ignorant of the ways of the world. Ramavikram’s younger brother, Narayanan Namboothiri, is left to mourn the death of his son born of his liaison with a Nair woman because the patriarch refused to help with money for treatment. Had the child remained alive, he would not have inherited anything from the family property if any. The lamenting brother leaves home quietly as his voice of protest against the unfairness and immorality of the system.The film shows that since the persistent rituals are extremely expensive and leads to the dwindling of resources with no one working at any other occupation, Ramavikraman keeps marrying girls from affluent Namboodiri families to keep the home fires burning with the heavy dowry each marriage brings. The women in the family are treated like housemaids and so are the younger men in the family. Trouble first begins to simmer when Ramavikraman takes on a third wife, Sreedevi who is 17, of his daughter Lakshmi’s age. Sreedevi is educated so the life within this home, trapped in outdated beliefs is shocked. First subtly and then openly, she begins to question the dictatorial torture of the other men which includes Ramavikraman’s own son. Sreedevi becomes friendly with Ramavikraman’s son, Raman Namboodiri, 26, the son born of his father’s first wife. She makes him aware of the merits of education and the demerits of illiteracy. The elders in the family use the friendship between the two to cast aspersions on Sreedevi’s character. Sreedevi teaches Lakshmi to read and write too. Finally, Sreedevi decides to strip herself of all associations that link her to the marriage and the family. She literally takes off her mangalsutra and hands it to her husband, She throws away the umbrella understood as a symbol of her ‘position’ within the family indicating that she is liberating herself from all filial ties. She pulls off her shawl and pushes it into the bushes as she walks gracefullyBreaking the thaali (mangalsutra) around her neck, discarding the protective umbrella and clad in a simple white attire 17-year-old Sridevi walks out of her husband Ramavikraman Namboothiri’s house. This is the last scene of the Sanskrit film Ishti. It symbolises the revolt led by the Namboothiri youth, in the ’20s and ’30s, when the Yogakshemam movement was at its peak. It was against the dogmatic and patriarchal Namboothiri traditions in Kerala.Arguably the country’s first Sanskrit film based on a social theme, Ishti revolves around 71-year-old Somayajippad Ramavikraman and his family, and follows their downfall due to the outdated traditions of the Namboothiri community.


இஷ்டி 

திரைப்படக்கலையைக் கற்பதற்காகக் கல்லூரிக்குப் போகத்தேவை இல்லை. துணை இயக்குனராகப்  பெரிய பெரிய இயக்குனர்களிடம் திட்டும் பேச்சும் கேட்டு இரவும் பகலும் ஓடியாடி அலைய வேண்டியதில்லை.உள்ளத்தில் உறுதியின் ஒளியும், பல சிறந்த திரைப்படங்களைக்கூர்ந்து கவனித்து வந்தாலே போதும்.நீங்களே ஒரு திரைப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துவிடலாம். தமிழ்த்திரைப்பட உலகிற்கு ஒரு சவால் விட்டு வென்று காட்டினார் எழுத்தாளர்  அமரர் ஜெயகாந்தன்.அவர் இயக்கித்தயாரித்த 'உன்னைப்போல் ஒருவன்' தேசிய விருது பெற்றது. 
அதே போல் மலையாளியான பிரபா கோபால பிள்ள என்ற பேராசிரியர் ஒரு சாதனையை நிகழ்த்திக்காட்டி உள்ளார்.  எவருக்காவது சினிமாத்துறை நண்பர்கள் இருந்தார்கள். அதற்கு முன் பாதை தெரிகிறது பார் படக்குழுவோடு ஒரு தொடர்பு இருந்தது.ஒரு படத்தைத் தயாரிக்கிற அளவு இளமையும் உடல் வலிமையும் இருந்தது, துணைபுரியவும் , தோள்கொடுக்கவும் தோழர்கள் இருந்தார்கள். ஆனால் அப்படி எந்தப்பின்பலமும் இன்றி ஒரு கல்லூரிப்பேராசிரியராக, அதுவும் சமஸ்கிருதப்பேராசிரியராக தன பணிக்காலம் முழுவதையும் லயோலா கல்லூரியில் [கத்தோலிக்கப் பிடிப்பு அதிகமுள்ள கல்லூரியில் கழித்துவிட்டு58 வயது கடந்து பணி ஓய்வு பெற்றபின்  இஷ்டி என்ற அற்புதமான சமஸ்கிருதத் திரைப்படத்தை எழுதி டைரக்ட் செய்து சாதனை படைத்திருக்கிறார். முழுக்க முழுக்க சம்ஸ்கிருதம் பேசும் அந்தத் திரைப்படம் ஒரு சமூகத் திரைப்படம். இன்னும் சொன்னால் ஒரு சமூகக்கொடுமையை எதிர்த்து மௌனப்போராட்டம் நடத்தும் ஒரு நம்பூதிரி இளம்பெண்ணின் கதையைச்சொல்வது.
நம்பூதிரிகள் வேதவித்துக்களாக அன்று விளங்கியவர்கள். ஆதி சங்கரர் ஒரு நம்பூதிரி தான். இன்றும் அவர்களது அறிவுக்கூர்மையும் நிர்வாகத்திறமையும் உலகப்புகழ் வாய்ந்தவை.
நம்பூதிரிகள் தங்களையே உலகில் மிக உயர்ந்த சாதிக்காரர்கள் என்று கூறி தம்மைத்தவிர பிற அனைவரையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைப்பவர்கள்.அவர்களிடையே 'அதிராத்ரம்' என்ற யக்ஞத்தைச்செய்து முடித்தவர்கள் அக்கித்திரி என்று போற்றப்படுவர். யக்ஞம் செய்து முடித்தபின் மிஞ்சும் தீச்சுடரைத் தனியாகச் சேகரித்து தன் உயிர் போகும்வரை அதனை அணையாது காத்துவரவேண்டும் என்ற நியதி உண்டு. அந்த யாகம் செய்வதற்கு ஏராளமான பொருள் செலவு பிடிக்கும் 


Saturday 4 November 2017

கடஷ்ரத்தா

கிரீஷ் காசரவள்ளி
மாற்றுத்  திரைப்படங்கள்
வையவன்.   

நாம் அனைவரும் பார்த்துப் பார்த்து ரசித்துவரும் திரைப்படங்களுக்கு மாற்றான சில இந்திய த்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. வெளிவர வாய்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளன. அவற்றில் பல திரைப்படங்கள்   உலக சாதனை படைத்துள்ளன; உலகத்திரைப்படவிழாக்களில்  பங்கேற்று பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளன. அவை பொருளாதார ரீதியில்அதிகமான வசூலைக் குவிக்கா விட்டாலும் பெருமளவில்ரசிகர்களைப்  பெறாவிட்டாலும் ஒருமுறை பார்த்தாலே வாழ்நாள் முழுதும் நம் நெஞ்சை விட்டு நீங்காத சில உண்டு. அந்தத்தி ரைப்படங்களை ப்பற்றி நாம் அறியவேண்டியது அவசியம். அவற்றைத்தயாரித்த மற்றும் இயக்கிய இயக்குனர்கள் பற்றியும் அறிந்துகொள்வது நம் திரைப்பட அறிவை வளர்க்கும்

 திரைப்படத்துறையில் இருபத்தைந்து வருஷங்களாகப் பணியாற்றியும்  எட்டே படங்கள் மட்டுமே இயக்கியும் தயாரித்தும் வருபவர் கிரீஷ் காசரவள்ளி. அநேகமாக அவர் படங்கள் எல்லாம் சமூகத்தில் நிலவிவரும் தீராத பிரச்சினை களைச்சுட்டிக்காட்டுபவை. முக்கியமாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மனதை உருக்கும் விதத்தில் எடுத்துக்காட்டுபவை 

கடஷ்ரத்தா தான் அவரது முதல் படம்.உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் யூ .ஆர்.அனந்தமூர்த்தியின் சிறுகதையைத் தழுவியது.  கடஷ்ரத்தா    கிரீஷ் காசரவள்ளி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவர் வாசித்த கதை அது  புனே பிலிம் இன்ஸ்டிடூட்டில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற   கிரீஷ் காசரவள்ளி  பிற்காலத்தில் அதைத் திரைப்படமாக எடுப்போம் என்றோ கடஷ்ரத்தா அகில இந்திய அளவில் ஸ்வர்ணகமல் என்ற தங்கத்தாமரை விருது  பெறுமென்றோ நினைத்திருக்கவே மாட்டார்

அந்தத்திரைப்படம் பாரிஸில் சினிமா நூற்றாண்டு க்கொண்டாடப்பட்டபோது 100 மிகச்சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் கடஷ்ரத்தா தான்.அதன் கதை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஒரு மௌன வேதனையோடு வெளிப்படுத்திய கதை. அது இரண்டே பாத்திரங்களை ச்சுற்றிப் பின்னப்பட்டது. ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் நடத்தும் ஒரு சிறு பையன் படிக்க வருகிறான். அவன் பெயர் அஜித். அந்தப் பள்ளி ஆசிரியரின் மகள்ஒரு இளம் வயது விதவை. பெயர் மீனா. பேதை அழகி.
  

அந்தப்பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியரின் இச்சைக்கு இரையாகி கர்ப்பமுற்று விடுகிறாள். சமூகக்கண்டனத்துக்குப் பயந்து அவளது தந்தை மீனா உயிரோடிருக்கும்போதே அவளுக்கான ஈமச்சடங்குகளைச் செய்து விடுகிறார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பள்ளி மூடப்படுகிறது.படிக்கவந்த சிறுவன் பள்ளியை விட்டுச்செல்ல நிர்ப்பந்திக்கப் படுகிறான். அக்காலத்தில்  இருந்த மத  சம்ப்ரதாயங்களாலும் உயர்குடியைச்சேர்ந்த பிராம்மண ஆதிக்கத்தாலும் பாதிப்பட்டவர்களின் வேதனைகளை வெளிப்படுத்தும் கலைப்பாங்கு அற்புதமாக இருக்கிறது. ஆண் ஆசிரியர்கள்    ஆண் சிறுவர்களுக்கு வேத மந்திரங்களை கற்றுக்கொடுப்பது அதை மாணவர்கள் குருட்டு மனப்பாடமாக ஒப்புவிப்பது ஆகிய காட்சிகள் நம்மைச் சிந்திக்க வைப்பதோடு சிரிக்கவும் வைக்கின்றன.
கடஷ்ரத்தா  தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவள் என்பதற்காக ஒருத்தி  சந்திக்க  நேர்ந்த   பெண்ணின்போராட்டத்தை ச்சித்திரித்தது .'நானும் அனந்தமூர்த்தியும் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர்கள்.அங்கு நிலவிய சாதிக்கொடுமைகளை நேரில் கண்டவர்கள்' என்று கூறுகிறார் கிரீஷ் .கிரீஷ் காசரவள்ளி எட்டு திரைப்படங்களை இயக்கி மொத்தம் நான்கு தங்கத்தாமரை விருது பெற்றார். தபரன கதே  [1987], தாயி சாஹிபா[1998] மற்றும் த்வீ பா [2002]