![]() |
| கிரீஷ் காசரவள்ளி |
மாற்றுத் திரைப்படங்கள்
வையவன்.
நாம் அனைவரும் பார்த்துப் பார்த்து ரசித்துவரும் திரைப்படங்களுக்கு மாற்றான சில இந்திய த்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. வெளிவர வாய்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளன. அவற்றில் பல திரைப்படங்கள்
உலக சாதனை படைத்துள்ளன; உலகத்திரைப்படவிழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளன. அவை பொருளாதார ரீதியில்அதிகமான வசூலைக் குவிக்கா
விட்டாலும் பெருமளவில்ரசிகர்களைப் பெறாவிட்டாலும் ஒருமுறை பார்த்தாலே வாழ்நாள் முழுதும் நம் நெஞ்சை விட்டு நீங்காத சில உண்டு. அந்தத்தி ரைப்படங்களை ப்பற்றி நாம் அறியவேண்டியது அவசியம். அவற்றைத்தயாரித்த மற்றும் இயக்கிய இயக்குனர்கள் பற்றியும் அறிந்துகொள்வது நம் திரைப்பட அறிவை வளர்க்கும்.
திரைப்படத்துறையில் இருபத்தைந்து வருஷங்களாகப்
பணியாற்றியும் எட்டே படங்கள் மட்டுமே இயக்கியும் தயாரித்தும் வருபவர் கிரீஷ் காசரவள்ளி. அநேகமாக அவர் படங்கள் எல்லாம் சமூகத்தில் நிலவிவரும் தீராத பிரச்சினை களைச்சுட்டிக்காட்டுபவை. முக்கியமாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மனதை உருக்கும் விதத்தில் எடுத்துக்காட்டுபவை
கடஷ்ரத்தா தான் அவரது முதல் படம்.உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் யூ .ஆர்.அனந்தமூர்த்தியின் சிறுகதையைத் தழுவியது. கடஷ்ரத்தா
கிரீஷ் காசரவள்ளி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவர் வாசித்த கதை அது புனே பிலிம் இன்ஸ்டிடூட்டில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற கிரீஷ் காசரவள்ளி பிற்காலத்தில் அதைத் திரைப்படமாக எடுப்போம் என்றோ கடஷ்ரத்தா அகில இந்திய அளவில் ஸ்வர்ணகமல் என்ற தங்கத்தாமரை விருது பெறுமென்றோ நினைத்திருக்கவே மாட்டார்.
அந்தத்திரைப்படம் பாரிஸில் சினிமா நூற்றாண்டு க்கொண்டாடப்பட்டபோது 100 மிகச்சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் கடஷ்ரத்தா தான்.அதன் கதை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஒரு மௌன வேதனையோடு வெளிப்படுத்திய கதை. அது இரண்டே பாத்திரங்களை ச்சுற்றிப் பின்னப்பட்டது. ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் நடத்தும் ஒரு சிறு பையன் படிக்க வருகிறான். அவன் பெயர் அஜித். அந்தப் பள்ளி ஆசிரியரின் மகள்ஒரு இளம் வயது விதவை. பெயர் மீனா. பேதை அழகி.
அந்தப்பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியரின் இச்சைக்கு இரையாகி கர்ப்பமுற்று விடுகிறாள். சமூகக்கண்டனத்துக்குப் பயந்து அவளது தந்தை மீனா உயிரோடிருக்கும்போதே அவளுக்கான ஈமச்சடங்குகளைச் செய்து விடுகிறார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பள்ளி மூடப்படுகிறது.படிக்கவந்த சிறுவன் பள்ளியை விட்டுச்செல்ல நிர்ப்பந்திக்கப் படுகிறான். அக்காலத்தில் இருந்த மத சம்ப்ரதாயங்களாலும் உயர்குடியைச்சேர்ந்த பிராம்மண ஆதிக்கத்தாலும் பாதிப்பட்டவர்களின் வேதனைகளை வெளிப்படுத்தும் கலைப்பாங்கு அற்புதமாக இருக்கிறது. ஆண் ஆசிரியர்கள்
ஆண் சிறுவர்களுக்கு வேத மந்திரங்களை கற்றுக்கொடுப்பது அதை மாணவர்கள் குருட்டு மனப்பாடமாக ஒப்புவிப்பது ஆகிய காட்சிகள் நம்மைச் சிந்திக்க வைப்பதோடு சிரிக்கவும் வைக்கின்றன.
கடஷ்ரத்தா தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவள் என்பதற்காக ஒருத்தி சந்திக்க நேர்ந்த பெண்ணின்போராட்டத்தை ச்சித்திரித்தது .'நானும் அனந்தமூர்த்தியும் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர்கள்.அங்கு நிலவிய சாதிக்கொடுமைகளை நேரில் கண்டவர்கள்' என்று கூறுகிறார் கிரீஷ் .கிரீஷ் காசரவள்ளி எட்டு திரைப்படங்களை இயக்கி மொத்தம் நான்கு தங்கத்தாமரை விருது பெற்றார். தபரன கதே [1987], தாயி சாஹிபா[1998] மற்றும் த்வீ பா [2002]



